ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு கண்காட்சியில் மாணவிகள் பங்கேற்பு!!!

சிவகாசியில் ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு கண்காட்சி! பள்ளி- கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!!

ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு கண்காட்சியில் மாணவிகள் பங்கேற்பு!!!

சிவகாசியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியின் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை சார்பாக நியூட்ரி எக்ஸ்போ -2022 என்ற தலைப்பில் ஆரோக்கிய வாழ்வு விழிப்புணர்வு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் 150 க்கும் மேற்பட்ட பள்ளி- கல்லூரி மாணவிகள் பங்கேற்று ஆரோக்கிய வாழ்வு முறைகள் குறித்தும், அன்றாடம் பயன்படுத்தும் உணவியல் முறைகள் பற்றியும் கண்காட்சி நடத்தப்பட்டது.

மேலும், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் காய்கறி மற்றும் பழ வகைகள் வளர்க்கும் விதம், உணவு கலப்படத்தை தடுக்கும் வழிகள், உணவு வகைகள் கெட்டுப் போகாமல் பராமரிப்பது எப்படி? தினந்தோறும் சத்தான தானிய வகைகளை உண்ண வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கருவறை முதல் கல்லறை வரை மனிதனின் அன்றாட வாழ்வில் உடல் உறுப்புகள் கெடாத வண்ணம் எந்தெந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தங்களது படைப்புகளை கண்காட்சியில் வைத்து பார்வையாளர்களுக்கு அதற்குரிய விளக்கங்களையும் அளித்தனர்.

இன்றைய கால வளரிளம் பருவ மாணவிகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு வாழ்வது எவ்வாறு? என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதேபோன்று மனநலம்,  உடல்நலம் பேணுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்ததாக இதன் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கண்காட்சியில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளுடன், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.